Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!

Jun 26, 2026 - 10:53 PM

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!
Mobitel Inner 1278

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் இன்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய குற்றவியல் பணியகத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் 41 வயதுடைய, கண்டி பகுதியைச் சேர்ந்த, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை பிரிவின் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆவார். 

சந்தேகநபர் இதற்கு முன்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதுக்குழுப் பிரிவின் பிரதிப் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்தக் குற்றத்தைச் செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குற்றத்தடுப்பு, போக்குவரத்து, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடித்துவக்கு, மத்திய குற்றவியல் பணியகத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு மற்றும் மத்திய குற்றவியல் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து மத்திய குற்றவியல் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278