Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2,847 தாதியர்களுக்கு நியமனம்

Jun 25, 2026 - 07:35 PM

ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2,847 தாதியர்களுக்கு நியமனம்
Mobitel Inner 1278

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் 2021 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த மாணவத் தாதியர்களுக்கு தொப்பி அணிவித்தல் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

இந்த நிகழ்வு இன்று (25) முற்பகல் அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்றது. 

அத்துடன், 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,949 பேருக்கும், ஒகஸ்ட் மாதத்தில் 2,920 பேருக்கும் தாதியர் நியமனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். 

2030 ஆம் ஆண்டளவில் தாதியர் சேவைக்காக 13,600 பேரை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அந்த இலக்கில் 50% ஐ இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தாதியர் சேவையில் இணையும் அனைவரதும் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மேலும், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வரும் தாதியர் பயிற்சிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து தற்பொழுது திட்டமிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

நாட்டின் இலவச சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதில் தாதியர் சேவை மிகவும் முக்கியமானது எனவும், இது ஒரு கௌரவமான தொழில் எனவும் அவர் வலியுறுத்தினார். 

இந்த நிகழ்வில், முதலாம் ஆண்டு செய்முறைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவத் தாதியர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சம்பத் இந்திக்க குமார, தாதியர் பணிப்பாளர்கள், தாதியர் சபையின் தலைவர், கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாணவத் தாதியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278