Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
உயர்தர மின்சார வாகன இயக்கத்தில் புதிய சகாப்தம்: இலங்கையில் XPENG G6 அறிமுகம்

Jun 24, 2026 - 05:15 PM

உயர்தர மின்சார வாகன இயக்கத்தில் புதிய சகாப்தம்: இலங்கையில் XPENG G6 அறிமுகம்
Mobitel Inner 1278

இலங்கையில் XPENG மின்சார வாகனங்களுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக செயல்படும் எவல்யூஷன் ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அமைக்கும் வகையில், புதிய தலைமுறை XPENG G6 மாடலை கொழும்பு 05 இல் அமைந்துள்ள தனது பல்வகை வர்த்தகநாம காட்சியறையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. 

பிரீமியம் ஸ்மார்ட் மின்சார SUV வாகனத்தின் அறிமுக நிகழ்வில் ஊடக பிரதிநிதிகள், தொழில் துறை பங்குதாரர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது வாகனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு, நேரடி காட்சிப்படுத்தல்கள் மற்றும் சோதனை ஓட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் XPENG G6 மாடலின் தொழில்நுட்ப திறன், வடிவமைப்பு மற்றும் ஓட்டுநர் அனுபவத்தை நேரடியாக உணர்ந்தனர். 

இலங்கையின் புதிய ஆற்றல் வாகன சந்தைக்கு முக்கியமான தருணத்தில் XPENG G6 அறிமுகமாகிறது. மின்சார இயக்கம் தொடர்பான நுகர்வோர் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்தாலும், பயண தூரம் குறித்த அச்சம், குறைந்த அளவிலான பிரீமியம் தேர்வுகள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் பற்றிய கவலைகள் இத்துறையில் முக்கிய சவால்களாக இருந்து வருகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பம், உலகளாவிய போட்டித்திறன் மற்றும் வலுவான சர்வதேச கூட்டாண்மைகளின் ஆதரவுடன் அறிமுகமாகும் G6, இவ்வாறான குறைபாடுகளை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அறிமுக நிகழ்வில் உரையாற்றிய எவல்யூஷன் ஆட்டோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் அஷான் விக்ரமசிங்க கூறுகையில், “நாங்கள் இலங்கைக்கு ஒரு காரை மட்டும் கொண்டு வரவில்லை. தொழில்நுட்பத்திலும், வாகன உரிமையாளர் அனுபவத்திலும், ஒரு நவீன மின்சார வாகனத்திடமிருந்து இலங்கை நுகர்வோர் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதிலும் ஒரு புதிய தரத்தை கொண்டு வருகின்றோம்,” என தெரிவித்தார். 

உலகளாவிய நடுத்தர மற்றும் உயர்தர மின்சார வாகனப் பிரிவில் போட்டியிடும் பிரீமியம் மின்சார SUV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ள XPENG G6, WLTP சான்றளிக்கப்பட்ட அதிகபட்சம் 480 கிலோமீட்டர் ஓட்டுநர் தூரத்தை வழங்குகிறது. 110 kW சக்தி மற்றும் 440 Nm முறுக்குவிசையை வழங்கும் மின்சார மோட்டாரால் இயக்கப்படும் இவ்வாகனம், செயல்திறன், ஆற்றல் சேமிப்பு மற்றும் அன்றாடப் பயன்பாடு ஆகியவற்றுக்கிடையே சிறந்த சமநிலையை வழங்குகிறது. 

G6 மாடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக XPENG நிறுவனத்தின் தனியுரிமை கொண்ட நிலை 2 மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பான XPILOT இடம்பெறுகிறது. இதில் தழுவும் வேகக் கட்டுப்பாடு, பாதை மையப்படுத்தல், தானியங்கி நிறுத்தம் மற்றும் தொலைநிலை அழைப்பு வசதி போன்ற அம்சங்கள் அடங்கும். பாதுகாப்பும் வசதியும் மேம்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட XPILOT, நிலை 2 தன்னாட்சி தரநிலைகளுக்கு ஏற்ப, முழு ஓட்டுநர் பொறுப்பையும் பாதுகாத்துக்கொண்டே ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்கிறது. 

வாகனத்தின் உட்புறம் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் ஆடம்பர அனுபவத்தைக் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 15.6 அங்குல மைய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, 18 ஸ்பீக்கர்களுடன் கூடிய Xopera 2.0 பிரீமியம் ஒலி அமைப்பு, காற்றோட்ட வசதி மற்றும் மசாஜ் செயல்பாடுகளுடன் கூடிய முன் இருக்கைகள், செயலில் இயங்கும் ஒலி குறைப்பு வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு ஒலி புகா கண்ணாடி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. இவ்வம்சங்கள் அனைத்தும் G6 மாடலை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, வசதியையும் அமைதியையும் மையமாகக் கொண்ட மின்சார SUV ஆக நிலைநிறுத்துகின்றன. 

XPENG நிறுவனம் சீனாவின் குவாங்சோவில் தலைமையகமுடைய, உலகளாவிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட தொழில்நுட்ப நிறுவனமாகும். நியூயோர்க் பங்குச்சந்தையில் XPEV என்ற குறியீட்டின் கீழ் வர்த்தகம் செய்யப்படும் இந்நிறுவனம், பாரம்பரிய வாகன உற்பத்தியைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் மேம்பட்ட இயக்க அமைப்புகள் போன்ற துறைகளிலும் தனது வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளது. 

Volkswagen குழுமத்துடன் XPENG கொண்டுள்ள மூலோபாய கூட்டாண்மை, அதன் உலகளாவிய நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. 2023 ஆம் ஆண்டில் Volkswagen, XPENG நிறுவனத்தில் 4.99% பங்குகளை கையகப்படுத்தியதுடன், அடுத்த தலைமுறை மின்சார வாகன தளங்களில் கவனம் செலுத்தும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்திலும் இணைந்தது. இது XPENG நிறுவனத்தின் தொழில்நுட்ப திறன்களில் தொழில்துறைக்கு உள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. 

XPENG G6 என்பது நிறுவனத்தின் பரந்த புதுமை சூழலமைப்பின் ஓர் அங்கமாகும். இதில் தன்னாட்சி இயக்க ஆராய்ச்சி, IRON தளத்தின் கீழ் மனித உருவ ரோபோடிக்ஸ் மற்றும் ARIDGE பிரிவின் மூலம் பறக்கும் வாகன மேம்பாடு ஆகியவை அடங்கும். இம்முன்முயற்சிகள் பலதரப்பட்ட போக்குவரத்து முறைகளிலும் அறிவார்ந்த அமைப்புகளிலும் இயற்பியல் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க XPENG கொண்டுள்ள நீண்டகால நோக்கத்தை பிரதிபலிக்கின்றன. 

இலங்கையைப் பொருத்தவரை, G6 மாடலின் அறிமுகம் ஒரு புதிய வாகன மாடலின் வருகையை விட மேலானதாகும். உலகளவில் முக்கியத்துவம் பெற்ற தொழில்நுட்ப நிறுவனம் உள்ளூர் சந்தையில் நுழைவதையும், மேம்பட்ட போக்குவரத்து தீர்வுகளையும், மின்சார வாகன உரிமையாளர் அனுபவத்திற்கான புதிய எதிர்பார்ப்புகளையும் கொண்டுவருவதையும் இது குறிக்கிறது. இலங்கையில் உயர்தர மின்சார வாகனப் பயன்பாட்டு தேர்வுகளை விரிவுபடுத்துவதற்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டுக்கு ஏற்பவே XPENG G6 அறிமுகம் அமைந்துள்ளது என எவல்யூஷன் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் இந்த வர்த்தகநாமத்தின் பிரவேசத்தோடு, முழுமையான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு, சேவை உட்கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடுகள் வழங்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை நிலையான போக்குவரத்தை நோக்கிய தனது மாற்றத்தைத் தொடரும் நிலையில், XPENG G6 மாடலின் வருகை நுகர்வோர் எதிர்பார்ப்புகளை வடிவமைப்பதிலும், உயர்தர பிரிவில் ஸ்மார்ட் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எவல்யூஷன் ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் பற்றி 

எவல்யூஷன் ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட், இலங்கையில் XPENG மின்சார வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். கொழும்பு 05, ஆர். ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள பல்வகை வர்த்தகநாம காட்சியறையையும், முழுமையாக இருப்பு வைக்கப்பட்ட உதிரிபாகங்களுடன் கூடிய பிரத்யேக சேவை உட்கட்டமைப்பையும் நிறுவனம் இயக்குகிறது. 

எவல்யூஷன் ஆட்டோ மற்றும் XPENG குறித்து மேலும் அறிய 074 411 2132 என்ற எண்ணில் எவல்யூஷன் ஆட்டோவை தொடர்புகொள்ளலாம். மேலும் www.xpeng.lk என்ற இணையத்தளத்தையும் பார்வையிடலாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278