Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Xiaomi 17T அறிமுகத்துடன், Xiaomi இன் புதிய விற்பனை நிலையம் One Galle Face வளாகத்தில் திறப்பு

Jun 23, 2026 - 05:45 PM

Xiaomi 17T அறிமுகத்துடன், Xiaomi இன் புதிய விற்பனை நிலையம் One Galle Face வளாகத்தில் திறப்பு
Mobitel Inner 1278

Xiaomi Sri Lanka நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விநியோகஸ்தரான அபான்ஸ் உடன் இணைந்து, இலங்கையில் தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, புதிய Xiaomi 17T ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை கடந்த ஜூன் 17 ஆம் திகதி இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அத்துடன், கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள One Galle Face வளாகத்தின் கீழ் தளத்தில் அபான்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் புதிய Xiaomi விற்பனை நிலையமும் அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வானது, இலங்கையில் Xiaomi வர்த்தகநாமத்தின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தையும், அதிநவீன தொழில்நுட்பம், ஒன்றிணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. Xiaomi உடன் மிகவும் புத்திசாலித்தனமான உலகிற்குள் காலடி எடுத்து வையுங்கள் (Step into a smarter world with Xiaomi) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பங்காளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, Xiaomi இன் புதிய கண்டுபிடிப்புகளையும் அதன் பரந்த ஸ்மார்ட் சுற்றுச்சூழல் அமைப்பையும் நேரில் கண்டு அனுபவித்தனர். அபான்ஸ் நிறுவனத்தின் வலுவான சில்லறை வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை வலையமைப்பின் ஆதரவுடன், One Galle Face வளாகத்தில் அமைந்துள்ள இப்புதிய விற்பனை நிலையம், வாடிக்கையாளர்கள் Xiaomi ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் வீட்டு உபயோகப் பொருட்கள், நவீன வாழ்க்கை முறை தொழில்நுட்பங்கள் மற்றும் பிற சாதனங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பயன்படுத்திப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தெளிவான புகைப்படங்கள், செயல்திறன் மற்றும் நாள் முழுவதும் நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய சிறந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியைத் தேடும் இலங்கை வாடிக்கையாளர்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய Xiaomi 17T, The Telephoto Master என்றும் அழைக்கப்படுகிறது. 

அதற்கு காரணம், அதில் உள்ள 50MP Leica முதன்மை கேமரா, 50MP Leica 5x periscope டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகும். 120x AI Ultra Zoom, Leica Live Moment மற்றும் Leica Summilux optical lens போன்ற தனித்துவமான தொழில்நுட்பங்கள் இருப்பதால், மனிதர்களின் முகங்கள், இயற்கை காட்சிகள் மற்றும் சிறப்பு பயணங்களின் நினைவுகளை மிகவும் தெளிவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது. 

Xiaomi 17T கையடக்கத் தொலைபேசியில் MediaTek Dimensity 8500-Ultra செயலி உள்ளதால், அன்றாட பணிகளை செய்தல், Gaming மற்றும் வீடியோ உருவாக்கம் போன்றவற்றை மிகவும் எளிதாகவும் வேகமாகவும் செய்ய முடியும். இதில் உள்ள 6.59 இன்ச் 1.5K 120Hz காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதோடு, 6500mAh பெரிய பேட்டரி மற்றும் 67W அதிவேக சார்ஜர் காரணமாக நாள் முழுவதும் தொடர்ந்து கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது. 

இந்நிகழ்வில் உரையாற்றிய அபான்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கலாநிதி சதுர ஜயவர்தன, “இலங்கையில் Xiaomi இன் வாடிக்கையாளர் விற்பனைப் பங்காளியாக, One Galle Face வளாகத்தில் அமைந்துள்ள இந்த புதிய Xiaomi விற்பனை நிலையத்தில் முதலீடு செய்வதற்கும், வாடிக்கையாளர்கள் Xiaomi இன் புதிய தொழில்நுட்பத்தை அனுபவித்து பார்க்கக்கூடிய ஒரு பிரத்தியேக இடத்தை உருவாக்குவதற்கும் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். எங்களது வலுவான வர்த்தக வலையமைப்பு, சிறந்த சேவை மற்றும் நேர்த்தியான வாடிக்கையாளர் அனுபவத்தின் மூலம், உலகின் நம்பகமான கண்டுபிடிப்புகளை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக கொண்டு சேர்ப்பதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. இலங்கைக்குள் Xiaomi இன் இந்த புதிய ஆரம்பத்திற்கு பங்களிப்புச் செய்ய கிடைத்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், சிறந்த வாழ்க்கை முறைக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இந்த கூட்டாண்மை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்.” என்றார். 

இந்த சிறப்பான தருணம் குறித்து கருத்து தெரிவித்த Xiaomi Sri Lanka இன் இலங்கைக்கான தலைவர் திரு. கெய்ன் வாங், “ஜூன் 17 ஆம் திகதி இலங்கையில் உள்ள Xiaomi எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாள். அன்றைய தினம் நாங்கள் இரண்டு முக்கிய மைல்கற்களைக் குறிக்க முடிந்தது. அதுதான் Xiaomi 17T கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்துவது மற்றும் One Galle Face வளாகத்தில் அபான்ஸ் அனுசரணையில் எமது புதிய விற்பனை நிலையத்தை திறப்பதாகும். இலங்கைக்குள் Xiaomi வர்த்தகநாமத்தின் வலுவான பயணம் மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம், உயர் செயல்திறன் மற்றும் மிகவும் வசதியான வாழ்க்கையை வழங்குவதற்கான எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது தெளிவாகக் காட்டுகிறது. கையடக்கத் தொலைபேசி மூலம் கூடுதல் விடயங்களைச் செய்ய எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, மேம்பட்ட Leica கேமரா அமைப்பு, உயர் செயல்திறன் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்க Xiaomi 17T ஆல் முடிகிறது. அதேபோல, எமது புதிய விற்பனை நிலையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு Xiaomi தயாரிப்புகளை சிறந்த முறையில் அனுபவித்து அறியும் ஒரு சிறப்பு வாய்ப்பு கிடைக்கிறது.” என தெரிவித்தார். 

இந்த புதிய விற்பனை நிலையத்தை திறப்பதன் மூலம் இலங்கை முழுவதும் Xiaomi வர்த்தகநாமத்தின் வர்த்தக வலையமைப்பு மேலும் வலுவடைவதுடன், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விரிவடைந்து வரும் தயாரிப்புத் தொகுப்பைப் பார்ப்பதற்கான ஒரு பிரத்தியேக வாய்ப்பும் கிடைக்கிறது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் முதல் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஸ்மார்ட் சாதனங்கள் வரை, நவீன தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதாக வழங்குவதற்கான Xiaomi இன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த விற்பனை நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Xiaomi 17T இன் அறிமுகம் மற்றும் அபான்ஸ் அனுசரணனயிலான புதிய Xiaomi விற்பனை நிலைய திறப்புடன், ஜூன் 17 ஆம் திகதி நாட்டின் Xiaomi வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இதன் மூலம் தெளிவாகும் விடயம் என்னவென்றால், மிகவும் புத்திசாலித்தனமான, நம்பகமான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் அதிகளவிலான இலங்கை வாடிக்கையாளர்களை ஆயத்தப்படுத்துவதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். 

Xiaomi 17T ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மற்றும் Xiaomi வர்த்தகநாமத்தின் ஏனைய பரந்த தயாரிப்புத் தொகுப்புகள் தற்போது One Galle Face வளாகத்தில் அமைந்துள்ள Xiaomi Exclusive விற்பனை நிலையத்திலும், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட Abans Elite காட்சியறைகளிலும், BuyAbans.com இணையத்தளத்தின் ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278