Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
2026 விருது விழாவில் நீண்டகால சேவையாற்றிய ஊழியர்களையும் சிறந்த செயல்திறன் கொண்டவர்களையும் சியெட் களனி கௌரவித்தது

Jun 22, 2026 - 05:37 PM

2026 விருது விழாவில் நீண்டகால சேவையாற்றிய ஊழியர்களையும் சிறந்த செயல்திறன் கொண்டவர்களையும் சியெட் களனி கௌரவித்தது
Mobitel Inner 1278

இலங்கையின் காற்றழுத்த டயர் தேவைகளில் பாதியை உற்பத்தி செய்வதுடன், நாட்டின் அதிக விற்பனையைக் கொண்ட டயர் வர்த்தகநாமமான சியெட்டை தயாரிக்கும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனமானது தனது 2026 ம் ஆண்டுக்கான நீண்டகால சேவை விருதுகள் மற்றும் சிறந்த ஊழியர்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வில்,ஊழியர்களை மையமாகக் கொண்ட தனது பண்பாட்டிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிகழ்வில் மொத்தம் 76 ஊழியர்கள் அவர்களின் சிறப்பான சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர். இதில் 5 (ஜந்து) ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த 25 ஊழியர்கள், 10 (பத்து) ஆண்டுகள் சேவையை எட்டிய 19 ஊழியர்கள், மேலும் நிறுவனத்தில் சிறப்பான 25 (இருபத்தி ஜந்து) ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்த 32 ஊழியர்கள் அடங்குவர். குறிப்பாக, 25 ஆண்டுகள் சேவையை கொண்டாடிய ஊழியர்களின் கணிசமான எண்ணிக்கையானது, நிறுவனத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள ஆழமான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. 

இது தொடர்பாக நிறுவனம் தெரிவிக்கையில் அதன் வலுவான ஊழியர்கள் தக்கவைப்பு சாதனையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அதன் ஊழியர்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த தக்கவைப்பு விகிதம் தொழில்துறை சராசரியை விட உயர்ந்ததாக இருப்பதுடன், திறமையான ஊழியர்களை ஈர்க்கவும், அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கவும், நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்ளவும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் தொடர்ந்து கொண்டிருக்கும் திறனை வெளிப்படுத்துகிறது. 

இந்த நிகழ்வில், நிறுவனத்தின் 13 துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர். நிதியாண்டின் போது சிறப்பான செயல்திறன், புத்தாக்கம், அர்ப்பணிப்பு மற்றும் வர்த்தக வெற்றிக்கான பங்களிப்பை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தன. அவற்றில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி, தொழில்நுட்பம், தர உறுதிப்படுத்தல், தர அடிப்படையிலான முகாமைத்துவம், களனி மற்றும் களுத்துறை தொழிற்ச்கலைகளில் உற்பத்தி செயற்பாடுகள், இரு இடங்களிலும் உள்ள பொறியியல் பிரிவுகள், விநியோகச் சங்கிலி, நிதி, தகவல் தொழில்நுட்பம், கொள்முதல் மற்றும் மனிதவளங்கள் ஆகியவை அடங்கும். 

நீண்டகால சேவையையும் சிறப்பான செயல்திறனையும் ஒருசேர அங்கீகரிப்பதன் மூலம், அர்ப்பணிப்பு, சாதனை மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை மதிக்கும் பண்பாட்டை சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஆனது தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது, என்று நிறுவனத்தின் மனிதவள துணைத் தலைவர் திரு. துஷார ஹெட்டித்தந்த்ரிகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழியர்கள் ஈடுபாடு, கற்றல் மற்றும் திறன் அபிவிருத்தி, நலன் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் தொடர்ந்து செலுத்தி வரும் கவனம், நேர்மறையான பணிச்சூழலால் ஆதரிக்கப்படும் மிகுந்த ஊக்கமுள்ள ஊழியர்கள் அணியை உருவாக்க உதவியுள்ளது என்றார். 

இலங்கையின் முதலிடம் வகிக்கும் டயர் வர்த்தகநாமமான சியெட் ஆனது, ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டயர்களை விற்பனை செய்து, இலட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. Brand Finance நிறுவனத்தால் இலங்கையின் மிக மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், LMD சஞ்சிகையினால் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தகநாமம் எனவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

சியெட் நிறுவனத்தின் சந்தை முன்னணி நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முதலீடுகளே முக்கிய காரணமாகும். அதன் உற்பத்தி நடவடிக்கைகள் பயணிகள் கார்கள், வேன்கள், எஸ்யூவிகள் (SUVs), வர்த்தக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனங்களுக்கான டயர்களை உள்ளடக்கியதாக உள்ளன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278