Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையின் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்காக SLIIT மற்றும் MAS Athlete Training Academy இடையில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை

Jun 17, 2026 - 02:40 PM

இலங்கையின் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்காக SLIIT மற்றும் MAS Athlete Training Academy இடையில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை
Mobitel Inner 1278

விளையாட்டு வீரர்களின் முழுமையான அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் MAS Athlete Training Academy மற்றும் Sri Lanka Institute of Information Technology (SLIIT) ஆகியன தமக்கிடையில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளன. MAS Athlete Training Academy இன் உத்தியோகபூர்வ உயர் கல்விக் கூட்டாளராக SLIIT செயற்படவுள்ளதுடன், 2025 டிசம்பரில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக இது நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கல்விக் குறிக்கோள் மற்றும் விளையாட்டுத் திறமைகள் ஆகியவற்றுக்கு இடையில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்திலிருந்து இலங்கை விளையாட்டு வீரர்களை விடுவிக்கும் வாக்குறுதியை உறுதி செய்வதே இக்கூட்டாண்மையின் நோக்கம். விளையாட்டு வீரர்கள் தமது பயிற்சிகளை தொடருகின்ற சமயத்தில் உயர் கல்வியையும் முன்னெடுப்பதற்கு இடமளித்து, இரண்டையும் ஒன்றாக மேற்கொள்ளும் கட்டமைக்கப்பட்ட வழிமுறையை இம்முயற்சி அவர்களுக்கு வழங்குகின்றது. 

MAS Athlete Training Academy இலுள்ள தகைமை கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு எட்டு வருட காலத்திற்கு, ஆண்டு தோறும் கலைமாணிப் பட்டப்படிப்பிற்கான ஐந்து பூரண புலமைப்பரிசில்களை SLIIT அவர்களுக்கு வழங்கவுள்ளது. விளையாட்டு வீரர்கள் வாழ்வில் விளையாட்டுத் துறையில் வளம் பெறும் அதேசமயம், கல்வித் 

தகைமைகளையும் வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான கல்விக்கான வாய்ப்பு மற்றும் உறுதிப்பாட்டை வழங்கி அர்த்தமுள்ள வழியில் அவர்களுக்கு உதவுவதே இப்புலமைப்பரிசில்களின் நோக்கமாகும். 

SLIIT துணைவேந்தர் பேராசிரியர் லலித் கமகே அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: “SLIIT இன் துணைவேந்தர் என்ற ரீதியில், இலங்கையில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக SLIIT மற்றும் MAS ஆகியன தமக்கிடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டாண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உறுதியாக நம்புகின்றேன். வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வளர்ப்பது எமது இளைஞர்,யுவதிகள் மத்தியில் ஒழுக்கம், விடாமுயற்சி, மற்றும் தேசிய பெருமையை வளர்ப்பதற்கு மிகவும் அத்தியாவசியமானது. ஒலிம்பிக் மற்றும் ஏனைய பாரிய சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்று, உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை தேடித் தரும் வகையில் சர்வதேச அளவில் தரம்மிக்க போட்டியாளர்களாக வளர்ப்பதே எமது இலட்சியம். சகல துறைகளிலும் வளர்ச்சி பெறச் செய்து, அடுத்த தலைமுறை தமது திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வந்து, எமது தேசத்தின் எதிர்காலத்திற்கு நேர்மறைப் பங்களிப்பை வழங்குவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இம்முயற்சி பிரதிபலிக்கின்றது.” 

நிதியியல்ரீதியான ஆதரவுக்குப் புறம்பாக, விளையாட்டு வீரர்களின் நலன்புரி மற்றும் பெறுபேற்றுத்திறன் ஆகியவற்றின் மீதான விரிவான அணுகுமுறையையும் இந்த ஒத்துழைப்பு வழங்குகின்றது. MAS Athlete Training Academy வழங்கும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி, போட்டிகளுக்கான வழிமுறைகள், விளையாட்டு அறிவியல் ஆதரவு, ஊட்டச்சத்து 

வழிகாட்டல், மற்றும் உளநலன் முயற்சிகள் ஆகியவற்றுக்கு இணையாக தற்போது SLIIT வழங்கும் கல்வி மூலவளங்கள், கற்றல் சூழல், மற்றும் தொழில்வாய்ப்பு மேம்பாட்டு வாய்ப்புக்கள் உதவியாக அமையும். இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து, சகல துறை ஆற்றல் கொண்ட, விடாமுயற்சி மற்றும் எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கும் ஆற்றல் கொண்ட நபர்களாக விளையாட்டு வீரர்களை வளர்க்கும் நோக்குடன் செயற்படவுள்ளன. 

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகள் உட்பட, பாரிய சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் ஆற்றல் கொண்டவர்களாக விளையாட்டு வீரர்களை வளர்க்கும் பரந்த தேசிய இலக்குடன் ஒன்றியதாக இக்கூட்டாண்மை காணப்படுகின்றது. கல்விரீதியான வளர்ச்சியுடன், உயர் செயற்திறன் கொண்ட பயிற்சியை ஒன்றிணைப்பதனூடாக நிலையான சர்வதேச போட்டித்திறனுக்குத் தேவையான அத்திவாரத்தை இம்முயற்சி வலுப்படுத்துகின்றது. 

மிக முக்கியமாக, இந்த ஒத்துழைப்பானது அர்ப்பணிப்பிற்கும் அப்பால் ஏற்கனவே செயல் வடிவம் பெற்றுள்ளது. விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே SLIIT இல் இணைய ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்தில் உள்வாங்கப்படுவதற்காக இன்னும் பல பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இத்திட்டம் வெகுவிரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை திட்டமிடப்பட்ட குறிக்கோளை நனவாக்கும் வகையில் இந்த முயற்சியின் ஒருமித்த தீவிரத்தைக் காண்பிக்கின்றது. 

SLIIT- MAS Athlete Training Academy கூட்டாண்மை விளையாட்டு வீரர்களின் நலன்புரி மற்றும் தேசிய அளவில் விளையாட்டுக்கள் வெற்றி பெறுவதற்கான மூலோபாயரீதியான முதலீடாகக் காணப்படுகின்றது. கல்விரீதியான தகைமையும், விளையாட்டுத்துறை பெறுபேறுகளும் ஒருங்கே அமையப்பெறும் வாய்ப்பினை வழங்கும் சூழலொன்றை ஏற்படுத்துவதன் மூலமாக, உலக அரங்கில் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளவர்களாகவும், அதேசமயம் அதற்கு அப்பால் தமது எதிர்காலத்தை உறுதியானதாக முன்னெடுக்க வல்லவர்களாக கல்வியறிவும், ஒழுக்கமும், மற்றும் விளையாட்டுக்களில் திறமையும் வாய்ந்த தலைமுறையொன்றை இம்முயற்சி தோற்றுவிக்கவுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278