Header Logo
Vallibel FD
Selan Bank
உலகம்
பிரெஞ்சு உதவியுடன் ரஷிய கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்து!

Jun 14, 2026 - 06:16 PM

பிரெஞ்சு உதவியுடன் ரஷிய கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்து!
Mobitel Inner 1278

இங்கிலாந்தின் கால்வாய் வழியாக செல்வதற்கு ரஷியாவின் எண்ணெய் சரக்கு கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் ரஷியாவின் உஸ்ட் லூகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய ஸ்மைர்டோஸ் கப்பல், இங்கிலாந்தின் தடைகளை தவிர்ப்பதற்காக அதன் பெயரை மிர்டோஸ் என பெயர்மாற்றம் செய்தது. 

இதையடுத்து இங்கிலாந்து கடற்பரப்பில் முன்னாள் பிரதமர் கேமரூன் கொடியுடன் நுழைந்த ரஷிய நிழல் கப்பலை, பிரிட்டிஷ் பாதுகாப்பு படைகள் இன்று (14) வழிமறித்து கைப்பற்றினர். 

மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் தடைகளை தவிர்ப்பதற்காக, இதுபோன்ற 700 இற்கும் மேற்பட்ட கப்பல்களை ரஷியா நம்பியுள்ளது. 

இந்நிலையில் ராயல் மரைன் கமாண்டோக்கள் பிரெஞ்சு அதிகாரிகள் உதவியுடன் 244 மீட்டர் நீளமுள்ள ரஷிய கப்பலை 6 மணி நேரம் போராடி கைப்பற்றினர். 

இந்த நடவடிக்கை குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “இந்த வெற்றிகரமான நடவடிக்கை ரஷியாவிற்கு மற்றுமொரு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உக்ரைனுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வரும் புதினின் நடவடிக்கைக்கு நாங்கள் அனுமதியளிக்கமாட்டோம்” என்று கூறினார். 

இதையடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காட்சிகளை பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அதில், ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் சினூக் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கப்பலில் இறங்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கப்பலில் உள்ள அறைகளில் அவர்கள் சோதனை நடத்துவதையும், ராணுவ அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்வதையும் கூடுதல் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278