Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவன தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Jun 13, 2026 - 04:17 PM

ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவன தலைவருக்கும் இடையில் சந்திப்பு
Mobitel Inner 1278

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company - CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் "நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம்" காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN தெரிவித்தார். 

குறிப்பாக, கொழும்பு துறைமுக நகர் சிறப்பு பொருளாதார வலயத்திற்காக வழங்கப்பட்டுள்ள ஊக்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்த தலைவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதையும் பாராட்டினார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) இன்றியமையாத காரணியாகும் என்பதை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ள இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கம் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான திசையில் செயற்படுவதாகவும் இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஆகக்கூடிய ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவதாகவும், குறிப்பாக கொழும்பு துறைமுக நகர் வலயத்தை அபிவிருத்தி அடைந்த பொருளாதார வலயமாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார். 

மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சைனா ஹார்பர் நிறுவனம் வழங்கிய ஆதரவும் இதன்போது ஜனாதிபதியின் நன்றியுடன் கூடிய பாராட்டைப் பெற்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278