Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
எல் நினோவால் இலங்கைக்கு ஆபத்தா?

Jun 10, 2026 - 07:48 PM

எல் நினோவால் இலங்கைக்கு ஆபத்தா?
Mobitel Inner 1278

எதிர்பார்க்கப்படும் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றம், கணிக்கப்பட்டதைப் போலவே இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. 

இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த மத்திய நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி. தர்மதிலக்க இதனைத் தெரிவித்தார். 

இம்முறை எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமையானது முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக இருக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய மேலதிக செயலாளர், அதன் தாக்கத்தால் நாட்டின் பிரதான நீர் மூலங்கள் கூட வற்றிப்போகும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டார். 

இதன் காரணமாக, நிலவும் சூழ்நிலைக்கு முன்கூட்டியே தயாராக வேண்டிய பலத்த தேவை உள்ளதாக அவர் வலியுறுத்தினார். 

மேலும், அவசர நிலைமையின் போது நீரை விநியோகிப்பதற்காகத் தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்தின் வசம் உள்ள நீர் விநியோகப் பவுசர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மேலதிக செயலாளர் கே.ஜி.பி. தர்மதிலக்க, 

"நாம் இதுவரை கேள்விப்படாத ஒரு 'எல் நினோ' நிலைமை இது. எனக்குத் தோன்றுவதன் படி, இதற்கு நாம் பெருமளவில் தயாராக வேண்டியிருக்கும். பொதுவாக வறட்சிக் காலங்களில் தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையங்கள் ஊடாக முழு இலங்கைக்குமே நாம் ஒரு மாதத்திற்கு நீர் வழங்குகிறோம். 

ஆனால், இந்த எல் நினோ வந்தால், பெருமளவில் நீரை விநியோகிக்க எங்களிடம் உள்ள பவுசர்கள் போதாது. இந்த எல் நினோ நிலைமையால் நீர் மூலங்கள் வற்றிப்போகலாம். அப்போது நீரைப் பெற்றுக்கொள்வதற்கான மூலங்கள் இல்லாமல் போகும். நான் நினைக்கிறேன், கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிக்கும் ஒரு நிலைமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டி வரலாம்" என்று கூறினார். 

ஒரு தசாப்தத்தின் பின்னர் ஏற்படும் மிகப்பலத்த எல் நினோ நிலைமையின் தாக்கம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக காலநிலை முகவரகம் தற்போது எச்சரித்துள்ளது. 

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும் இதன் காரணமாக ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் வறட்சி நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

எல் நினோ நிலைமை என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை சாதாரண அளவை விட அதிகரிப்பதன் மூலம் உலகெங்கிலும் உள்ள காலநிலை வடிவங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு இயற்கை நிகழ்வாகும். 

இந்த எல் நினோ நிலைமை காரணமாக இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களில் சாதாரண மழைவீழ்ச்சி குறைவடைந்து, கடுமையான வறட்சி நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278