Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
அதிபர் சேவையின் நீண்டகால சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

Jun 9, 2026 - 06:30 PM

அதிபர் சேவையின் நீண்டகால சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
Mobitel Inner 1278

இலங்கை அதிபர் சேவையின் அதிகாரிகள் பல வருடங்களாகக் கோரி வந்த சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி, அவர்களின் ஆரம்பச் சம்பளப் படியை முறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 03/2014 (I) என்ற புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


2026 மே மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அனுமதியின்படி இந்த புதிய சம்பளத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

பதவியுயர்வாகக் கருதி சம்பளத்தைக் கணக்கிட அனுமதி:


இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த 03/2014 சுற்றறிக்கையின் 01 ஆம் பிரிவும் அதன் உப பிரிவுகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.


அதற்குப் பதிலாக, நிறுவனக் கோவையின் முதலாம் தொகுதியின், VII ஆம் அத்தியாயத்தின், 05 ஆம் பிரிவின்படி புதிய பிரிவுகளைப் பிரதியீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய திருத்தத்தின்படி, இனிவரும் காலங்களில் அதிபர்களின் சம்பளக் கணிப்பீட்டை "ஒரு பதவியுயர்வாகக் கருதி"  மேற்கொள்வதற்கான தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அதிபர் சேவை அதிகாரிகள் எதிர்நோக்கிய கடுமையான சம்பள முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு சாதகமான நடவடிக்கை இதுவெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பதவியுயர்வுத் தகைமைகளைப் பூர்த்தி செய்ய விசேட சலுகைக் காலம்:


சம்பளத் திருத்தத்திற்கு மேலதிகமாக, அதிபர் சேவையின் பதவியுயர்வுச் செயல்முறையின் போது ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களுக்கு நிவாரணம் வழங்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


குறிப்பாக, 2009 நவம்பர் 13ஆம் திகதி இலங்கை அதிபர் சேவையின் 3ஆம் வகுப்பிற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகளின்,  Grade 1 வரையான பதவியுயர்வுச் செயல்முறையை முறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.


அரசாங்க சேவை ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் அந்த அதிகாரிகளுக்காக விசேட சலுகைக் காலமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இதற்கமைய, சம்பந்தப்பட்ட அதிபர்கள் தங்களது பதவியுயர்வுகளுக்கான தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட சலுகைக் காலம் வழங்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278