Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
'அசிதிசி' ஊடக மற்றும் தொழில்நுட்ப கல்வித்தொகை - 2026: விண்ணப்பங்கள் கோரல்!

Jun 9, 2026 - 05:36 PM

  'அசிதிசி' ஊடக மற்றும் தொழில்நுட்ப கல்வித்தொகை - 2026: விண்ணப்பங்கள் கோரல்!
Mobitel Inner 1278

இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்முறை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் 'அசிதிசி வெகுஜன ஊடக' மற்றும் 'அசிதிசி தொழில்நுட்ப' கல்வித்தொகை திட்டங்கள் இந்த வருடமும் (2026) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


2026ஆம் ஆண்டுக்கான இக்கல்வித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 ஜூலை மாதம் 10 ஆம் திகதியாகும்.  


விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்:


நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மின்னணு (இலத்திரனியல்) மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

 

விண்ணப்பதாரர்கள் 18-55 வயதுக்கு இடைப்பட்டவராகவும், 02 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும். 

 

மேலும், விண்ணப்பிக்கும் பாடநெறியானது ஊடகத் துறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுடன், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையை விண்ணப்பதாரர்கள் பெற்றிருப்பது கட்டாயமாகும்.  


வழங்கப்படும் நிதியுதவி விபரம்:


'அசிதிசி வெகுஜன ஊடக' கல்வித்தொகை திட்டத்தின் கீழ் பின்வருமாறு நிதியுதவிகள் வழங்கப்படும்:


முனைவர் பட்டம் (Ph.D.): ரூபா 700,000/-  


முதுதத்துவமாணி (M.Phil.), முதுகலைமாணி (M.A.) மற்றும் பொதுப் பட்டப் படிப்புகள்: அதிகபட்சமாக ரூபா 350,000/-  


முதுகலை டிப்ளோமா, டிப்ளோமா, நீண்டகால மற்றும் குறுகியகால சான்றிதழ் பாடநெறிகள்: அதிகபட்சமாக ரூபா 200,000/-  


இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஊடகவியலாளர்கள் 'அசிதிசி தொழில்நுட்ப வெகுஜன ஊடக' கல்வித்தொகை திட்டத்திற்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இரண்டு திட்டங்களுக்குமான அதிகபட்ச நிதி எல்லை ரூபா 350,000/- ஆகும்.


எனினும், ஒரே பாடத்துறையை உள்ளடக்கும் இரண்டு பாடநெறிகளுக்காக இரு திட்டங்களின் மூலமும் விண்ணப்பிக்க முடியாது. 
 

தெரிவு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை:


சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படும் தேர்வுத் குழுவொன்றின் நேர்முகத் தேர்வின் மூலமாகவே கல்வித்தொகை பெறுநர்கள் தெரிவு செய்யப்படுவர்.  


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 2026 ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் "சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, இல 163, 'அசிதிசி மெந்துர', கிருளப்பன மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05" என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.


இதில் 'அசிதிசி வெகுஜன ஊடக' விண்ணப்பங்கள் பணிப்பாளர் (ஊடகம்) அவர்களுக்கும், 'அசிதிசி தொழில்நுட்ப' விண்ணப்பங்கள் பணிப்பாளர் (அபிவிருத்தி) அவர்களுக்கும் முகவரியிடப்பட வேண்டும்.  


இணையவழியாக (Online) விபரங்களை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.media.gov.lk மூலமாகவோ அல்லது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.


மாதிரி விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும்.  இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 0112513645 அல்லது திரு. சந்தன (0714931696) ஆகியோரைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 விண்ணப்பப் படிவங்கள் கீழே…

Loading document preview...
Loading document preview...
Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278