Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
XPENG மற்றும் AVATR ஊடாக நிறைவேற்று அதிகாரிகளுக்கான பிரீமியம் போக்குவரத்து திறனை வெளிப்படுத்த 45 Under 45 CEO விருதுகளுடன் இணைந்த Evolution Auto

Jun 9, 2026 - 03:24 PM

XPENG மற்றும் AVATR ஊடாக நிறைவேற்று அதிகாரிகளுக்கான பிரீமியம் போக்குவரத்து திறனை வெளிப்படுத்த 45 Under 45 CEO விருதுகளுடன் இணைந்த Evolution Auto
Mobitel Inner 1278

இலங்கையில் XPENG மற்றும் AVATR வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Evolution Auto நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகன போக்குவரத்துத் தீர்வுகள் மூலம் தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்தை ஆதரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், புகழ்பெற்ற '45 Under 45 CEO Awards 2026' நிகழ்வுடன் கைகோர்த்துள்ளது. 

இந்த விருது வழங்கும் விழா Global CEO Forum (Pvt) Ltd. நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொலைநோக்குப் பார்வை, உறுதிப்பாடு மற்றும் சாதனைகளைக் கொண்ட 63 தலைசிறந்த CEOகள், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். 

புத்திசாலித்தனம், செயல்திறன், புத்தாக்கம் மற்றும் முற்போக்கான சிந்தனையைப் பிரதிபலிக்கும் இரண்டு பிரீமியம் மின்சார வாகன வர்த்தகநாமங்களான XPENG மற்றும் AVATR இனை காட்சிப்படுத்துவதற்கு Evolution Auto நிறுவனத்திற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமைந்தது. நவீன நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த வர்த்தகநாமங்கள், அந்தந்தத் துறைகளில் மாற்றத்திற்குத் தலைமை தாங்குபவர்களின் இலக்குகளுடன் ஒத்துப்போகும் அதிநவீன போக்குவரத்து அனுபவத்தை வழங்குகின்றன. 

இந்நிகழ்வானது நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க பெருநிறுவன நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரை ஒன்றிணைத்து, அவர்களது சாதனைகளை கொண்டாடுவதற்கும் புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவம் தொடர்பான உரையாடல்களை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்பளித்தது. புத்தாக்கமான தலைமைத்துவத்திற்கும், நிலைபேறான வளர்ச்சியை செயற்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கும் இடையிலான இயல்பான தொடர்பை Evolution Auto நிறுவனத்தின் பங்கேற்பு எடுத்துக்காட்டியது. 

இலங்கையின் அடுத்த தலைமுறை வணிகத் தலைவர்களை உருவாக்குவதில் பங்களிப்பு செய்த பல புகழ்பெற்ற வெற்றியாளர்களுக்கு, Evolution Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

இந்தக் கூட்டாண்மை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையின் வணிகச் சமூகத்திற்குள் புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளவர்களை அங்கீகரிக்கும் ஒரு தளமான '45 Under 45 CEO Awards' நிகழவிற்கு ஆதரவளிப்பதில் நாம் பெருமை அடைகிறோம். இங்கு கௌரவிக்கப்பட்ட தலைவர்கள், Evolution Auto நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகும் இலட்சியம் மற்றும் விசேடத்துவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர். XPENG மற்றும் AVATR மூலம் இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகனத் தீர்வுகளை நாம் வழங்குகிறோம். இது அதிநவீன தொழில்நுட்பம், உயர்தர வசதி மற்றும் செயல்திறனைக் கொண்ட வாகனங்கள் மூலம் முற்போக்கான சிந்தனை கொண்ட நிபுணர்களை வலுப்படுத்துகிறது." என்றார். 

XPENG மற்றும் AVATR ஆகிய வர்த்தகநாமங்கள் கொண்டுள்ள புத்திசாதுர்யமான அம்சங்கள், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பிரீமியம் வாகனம் செலுத்தும் அனுபவத்திற்காக சர்வதேச ரீதியாக மதிப்பைப் பெற்றுள்ளன. இலங்கையில் இந்த இரு வர்த்தகநாமங்களினதும் பிரத்தியேகப் பிரதிநிதியாக, இன்றைய நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தொழில்முனைவோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புத்தாக்கமான மின்சார வாகனத் தீர்வுகளை Evolution Auto நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. 

தலைமைத்துவம் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் இத்தகைய திட்டங்களை ஆதரிப்பதன் மூலம், இலங்கையின் புத்திசாதுர்யமான மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்வதில் தனது அர்ப்பணிப்பை Evolution Auto நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

மேலதிக விபரங்களுக்கு: www.xpeng.lk மற்றும் www.avatr.lk இணையதளங்களுக்கு நுழையவும் அல்லது +94 74 411 2132 ஊடாக (ரணில்) தொடர்பு கொள்ளவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278