Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
வரலாற்றில் முதல்முறையாக ஜப்பான் - இலங்கை இணைந்து நடத்தும் கூட்டு உலக இசைப்பயணத்திற்காக ஆதித்ய நாராயண மற்றும் சங்க திநெத் ஆகியோர் இணைகின்றனர்

Jun 8, 2026 - 03:59 PM

வரலாற்றில் முதல்முறையாக ஜப்பான் - இலங்கை இணைந்து நடத்தும் கூட்டு உலக இசைப்பயணத்திற்காக ஆதித்ய நாராயண மற்றும் சங்க திநெத் ஆகியோர் இணைகின்றனர்
Mobitel Inner 1278

தெற்காசிய பொழுதுபோக்குத்துறை வரலாற்றில் ஒரு திருப்புமுனை மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்திய இசை உலகின் பிரபல பாடகர்களான ஆதித்ய நாராயண மற்றும் இலங்கையின் மக்களின் மனதை வென்ற இளம் தலைமுறைப் பாடகர் சங்க திநெத் ஆகியோரின் இணைப்பில், உலகெங்கும் அரங்கேறவுள்ள பிரம்மாண்டமான இசை விழா தொடர் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு அண்மையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. நாடுகள் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து, தெற்காசிய இசையின் எல்லைகளை விரிவுபடுத்தும் இந்த இசை விழா தொடர் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு நிகழ்வு, மே 28 ஆம் திகதி Life at City of Dreams Gatz அரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது. 

இலங்கையையும் ஜப்பானையும் பிரதான நாடுகளாகக் கொண்டு, சர்வதேச இசை ரசிகர்களுக்கு கிழக்காசிய மற்றும் தெற்காசிய இசையின் கலவையை எடுத்துச் செல்லும் பிரம்மாண்டமான இசைப்பயணத்திற்காக, சர்வதேச இசை கூட்டாண்மை ஒன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். உலகளாவிய இசையின் வலிமைக்கு ஒரு பெருமிதமான சான்றாக விளங்கும் இந்த இசைச் சுற்றுப்பயணமானது, தெற்காசிய மற்றும் கிழக்காசிய பிராந்தியங்களுக்குரிய செழுமையான கலைத்துவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பெரிதும் உந்துசக்தியாக அமைகின்றது. 

இந்த தனித்துவமான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவது இலங்கை மற்றும் ஜப்பானில் உள்ள குழுக்களின் கூட்டு முயற்சியாகும். இந்த சர்வதேச சுற்றுப்பயணத்திற்கான ஒட்டுமொத்த தயாரிப்பு ஒருங்கிணைப்பு, பிராந்தியத்தில் பாரிய அளவிலான பொழுதுபோக்கு நிகழ்ச்சி அனுபவங்களை வழங்குவதில் வலுவான பின்னணியைக் கொண்ட இலங்கையை தளமாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனமான Sound Vision Event Management மூலம் வழங்கப்படுகிறது. 

மே மாதம் 28 ஆம் திகதி நடைபெறும் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பானது, மேலதிக அறிவிப்புகள், கலைஞர்களின் வருகை, ஊடகங்களுடனான நேரடி கலந்துரையாடல்கள் மற்றும் வரவிருக்கும் சுற்றுப்பயணத்தின் முழுமையான விவரங்களின் முதல் பார்வை ஆகியவற்றிற்காக ஊடகவியலாளர்கள், அனுசரணையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை ஒன்றிணைக்கவுள்ளது. Cinnamon Life at City of Dreams இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கான விருந்தினர் சேவைப் பங்காளியாக செயல்படுகிறது, இது வருகை தரும் அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை உறுதி செய்கிறது. 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுமுயற்சியானது சர்வதேச பொழுதுபோக்குத்துறையில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்க உள்ளதுடன், இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான கலாசார, கலை மற்றும் இசைத் தொடர்புகளை வலுப்படுத்துவதுடன், பிராந்தியத்திற்கான எல்லை கடந்த இசை கூட்டாண்மைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கவுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278