Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
குழுநிலைச் செயற்பாடு, விளையாட்டுப் பண்பு மற்றும் சிறப்பு ஆகியன ஒன்றிணைந்த தருணம்

Jun 8, 2026 - 03:06 PM

குழுநிலைச் செயற்பாடு, விளையாட்டுப் பண்பு மற்றும் சிறப்பு ஆகியன ஒன்றிணைந்த தருணம்
Mobitel Inner 1278

ஒற்றுமை, குழுப்பணி மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் தீர்வு வழங்குநரான SLT-MOBITEL, தனது வருடாந்த SLT-MOBITEL Games 2026 நிகழ்வை அண்மையில் SLT தலைமைப் பணிமனை வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. இந்த நிகழ்வு, விளையாட்டு மற்றும் ஒரு பொதுவான நோக்கத்தின் ஊடாக நிறுவனத்தின் குழுக்களை ஒன்றிணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, ஊழியர் ஈடுபாட்டை மேம்படுத்தும் நிறுவனத்தின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றாக ஆரம்பமாகியுள்ளது. 

ஆரம்ப வைபவத்தில் சிரேஷ்ட தலைமைத்துவ அங்கத்தவர்களான SLT குழும தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா, SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களும் பங்கேற்ற வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் SLT-MOBITEL Games Trophy உத்தியோகபூர்வமாகத் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், அணிகளின் அறிமுகங்கள் மற்றும் நல்லாசிகளும் வழங்கப்பட்டன. தமது நிறுவனத்தின் மாபெரும் பலம் தமது பணியாளர்கள் என்பதில் SLT-MOBITEL உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. 

உயிர்களை இணைப்பதுடன் அவற்றை வளப்படுத்துதல் என்ற நிறுவனத்தின் தொலைநோக்குத் திட்டத்தின் பிரகாரம், இந்த நிகழ்வு அமைந்துள்ளதுடன், அனைத்துக் குழுக்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட ஊழியர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைவதற்கான வாய்ப்பையும் வழங்கியிருந்தது. இந்நடைமுறையானது, பணியாளர்களிடையே ஆரோக்கியம், ஒத்துழைப்பு, உள்ளடக்கல் தன்மை மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், நிறுவனம் முழுவதும் நெகிழ்ச்சித்திறன், பரஸ்பர மரியாதை மற்றும் சிறந்து விளங்குதல் ஆகிய விழுமியங்களை மேலும் வலுப்படுத்தியிருந்தது. 

மிக முக்கியமாக, SLT குழுமத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய SLT-MOBITEL Sports Council 2026/27, இப்போட்டிகளை மேற்பார்வை செய்தல், நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், அணிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் ஒட்டுமொத்தப் போட்டிகளையும் சீரான முறையில் ஒழுங்கமைத்தல் ஆகிய பணிகளை முன்னெடுத்தது. அத்துடன், இக்கழகம், ஊழியர்களின் பெருமிதம் மற்றும் பங்களிப்பிற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதுடன், ஒட்டுமொத்த SLT குழுமத்திலும் உள்ள விளையாட்டு சங்கங்களுக்குப் பக்கபலமாக நின்று, ஊழியர்களின் ஈடுபாட்டை ஊக்குவித்தது. 

இந்நிகழ்வு, தடகளம், பூப்பந்தாட்டம், கேரம், சதுரங்கம், கிரிக்கெட், கால்பந்து, நீச்சல், கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டம் உள்ளிட்ட பிரபலமான விளையாட்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 ஊழியர் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மற்றும் சுறுசுறுப்பானதொரு போட்டிப் பருவத்திற்கு மிகச் சிறந்ததொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278