Jun 8, 2026 - 01:17 PM
சமந்தா தயாரித்து, நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படம் ஜூன் 19ம் திகதி திரைக்கு வருகிறது.
முதலில் இப்படம் மே மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர். அந்த நேரத்தில் ஜூன் 19ம் திகதி இப்படம் திரைக்கு வருவதாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய போது உறுதிப்படுத்தினார் சமந்தா.
இந்நிலையில் மா இண்டி பங்காரம் படம் குறித்து இன்னொரு தகவலையும் வெளியிட்டுளளார் சமந்தா.
அதில் இயக்குனர் நந்தினி ரெட்டி முதலில் சாய் பல்லவியை மனதில் கொண்டுதான் இந்த படத்திற்கான திரைக்கதையை உருவாக்கினார்.
ஆனால் அவர் பல படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் இந்த படத்தை ஏற்க முடியவில்லை.
அதன் பிறகு தான் சாய் பல்லவிக்கு எழுதி வைத்த கதையில் திருத்தம் செய்து என்னிடத்தில் சொன்னார். அந்த கதை பிடித்திருந்தால் தயாரித்து நடிப்பதற்கு நான் ஒத்துக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.
இதற்கு சாய் பல்லவி, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, இந்த படம் சமந்தாவிற்காகவே விதிக்கப்பட்டது.
இப்படத்தை தியேட்டரில் காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். சமந்தா, நந்தினி ரெட்டி இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.





























