Jun 7, 2026 - 01:22 PM
அக்மீமன பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் 50 உறுப்பினர் பதவிகளை வென்று, அதன் நிர்வாக அதிகாரத்தைக் கூட்டு எதிர்க்கட்சிக் குழு கைப்பற்றியுள்ளது.
நேற்று (06) நடைபெற்ற இத்தேர்தலில், மொத்த உறுப்பினர் பதவிகளில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு கூட்டு எதிர்க்கட்சிக்கு முடிந்ததுடன், தேசிய மக்கள் சக்தியினால் (NPP) 43 உறுப்பினர் பதவிகளை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதன்படி, கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாகத்தை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை கூட்டு எதிர்க்கட்சிக் குழு தற்போது மேற்கொண்டு வருகின்றது.





























