Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
16 வயது சிறுவனைத் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

Jun 4, 2026 - 10:00 AM

16 வயது சிறுவனைத் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!
Mobitel Inner 1278

நபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி அடிப்படையில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காலி பகுதியில் இடம்பெற்ற சொத்துத் திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேகநபராகக் கருதப்பட்ட நபர் ஒருவரை, கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.


காலி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி, சொத்துத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேகநபரான சிறுவனை, முறைப்பாட்டாளர் தரப்பினர் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக அவரது தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 47 வயதுடைய பெண், அவரது கணவர் மற்றும் அவர்களின் 17 வயதுடைய மகள் மற்றும் மகன் எனத் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (04) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278