Nov 28, 2026 - 10:41 AM

நுவரெலியா மாவட்டம் - கொட்டகலை, டிரைட்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஊடாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
நீர் தாங்கி அமைப்பு மற்றும் குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பில் பாடசாலை அதிபர் சரவணன் சசிகுமார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய எம். உதயகுமார் தனது தனிப்பட்ட நிதி பங்களிப்பில் திட்டத்தை நிறைவு செய்து மாணவர்கள் பாவனைக்கு வழங்கி வைத்துள்ளார்.
மாணவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்டமானது ‘உதயம்’ அமைப்பு, 2002 ஆம் ஆண்டு தரம் ஐந்து பிரிவு பழைய மாணவர்கள் மற்றும் ‘ஜஸ்விதா’ நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் ஆகியோரின் கூட்டு முயற்சியாலும் நிதிப் பங்களிப்பாலும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக சுமார் 250 இற்கு மேற்பட்ட மாணவர்கள் நன்மை அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

































