Nov 10, 2026 - 07:13 PM

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் (Signal system) கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறிப்பிட்ட ரயில் நிலையங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கும் அனைத்து பாதைகளுக்குமான ரயில்களும் தாமதமாகவே இயக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (10) பிற்பகல் இந்தச் சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

































