Nov 10, 2026 - 06:58 PM

2026ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மின்சார கட்டணக் திருத்தத்தை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, மூன்றாவது காலாண்டில் நடைமுறையிலிருந்த அதே மின் கட்டண முறைமையே இந்தக் காலாண்டிலும் அமுலில் இருக்கும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் (NSO) சமர்ப்பிக்கப்பட்ட செலவுத் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மின் விநியோகத்திற்கான செலவு 2.88 சதவீதத்தால் அதிகரிக்கும் என ஆணைக்குழு அவதானித்துள்ளது.
இருப்பினும், நவம்பர் 9ஆம் திகதி புதுப்பிக்கப்பட்ட செலவுத் தரவுகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்தாலோசனையின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கருத்திற் கொண்டு, மின் கட்டணத்தில் திருத்தம் எதுவும் தேவையில்லை என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் இறுதிப் காலாண்டிற்கான தொடர்புடைய செலவுத் தரவுகளை NSO ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தத் தரவுகள் ஒக்டோபர் 6ஆம் திகதியே ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன என்றும் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

































