Oct 27, 2026 - 09:19 AM

இன்று (27) துவிதியை திதி, சந்திர பகவான் மேஷ ராசியின் பரணி பின் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். கன்னி ராசியில் உள்ள அஸ்தம் பின் சித்திரை நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நிதிநிலை ரீதியாக அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் தொடர்பாக முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இருப்பினும் கவனமாக அதை தேர்ந்தெடுப்பதும், முடிவுகள் எடுப்பதும் நன்மை தரும். இன்று சிலரிடமிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படலாம். மனதில் உங்களுடைய கவலைகள் குறையும்.மனதில் குழப்பம் வந்து நீங்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வழக்கு விவகாரங்களில் கவனமும், புரிதலும் தேவைப்படும். பயணங்கள் மேற்கொள்வதில் நிதானம் தேவை. முடிந்தவரை தவிர்க்கவும். குடும்பத்தினருடன் வெளிப்படையான உரையாடல், புரிதலை அதிகரிக்க உதவும். உங்கள் நிதி நிலையை சமநிலையில் பராமரிக்கவும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடவும். நண்பர்கள் விஷயத்திலும், காதல் உறவில் விட்டுக்கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் நிதானத்தை கடைபிடிக்கவும். அலைச்சலால் சோர்வு ஏற்படக்கூடிய நாள். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடின பணிகளை செய்யக்கூடிய அவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. உயர் கல்வி, வேலை முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கலை மீதானா ஆர்வம் உண்டாகும். அன்புக்குரியவர்களுடன் பிணைப்பு அதிகரிக்க கூடிய நாள். உங்களுடைய பணியிடத்தில் சில சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், தைரியத்துடன் அதை அணுகவும். நிதி விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்கள் நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை விட கூடுதல் லாபத்தை பெறலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் நலன் மேம்படுத்துவதில் கவனம் தேவை. அதற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளவும். உங்களின் தொழில் முறை உறவுகள் அதிகரிக்கும். உங்களுடைய தனவரவு அதிகரிக்க கூடிய நாள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகக் கூடிய நாள். வியாபாரிகளுக்கு இருந்த தடைகள் விலகும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். உங்கள் வாழ்க்கைத் துணை உறவினர்கள் வழியில் உங்களுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய விஷயங்களை செய்ய தயாராக இருங்கள். அதே சமயம் உங்களுக்கான வாய்ப்புகளை எடுத்துக் கொள்வதில் அவசரப்படாமல் சிந்தித்து பயன்படுத்தவும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நாள். இன்று மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் .இன்று உங்களுடைய தெய்வ பக்தி கூடும். எதிர்பாராத இடங்களில் இருந்து நன்மை கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சு செயலில் கவனம் தேவை. குடும்ப உறவு பராமரிக்க இனிய பேச்சு தேவைப்படும்.சிறிய முயற்சிகள் மேற்கண்டாலும் பெரிய மாற்றங்களை காண்பீர்கள். முதலீடு செய்வது, விளைவு உயர்ந்த பொருட்களை வாங்குவது போன்ற விஷயங்களை கவனம் தேவை. தந்தை வழி உறவினர்களால் சில சிரமங்கள் ஏற்படலாம். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.இன்றைய தினம் தெய்வ பக்தியுடன் செயல்படவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சகோதரர்கள் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு சில நல்ல அனுபவங்கள் கிடைக்கும். சில நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல்நல பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகளுக்கான பாதையை கண்டறிய முடியும். உங்கள் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை இடையே சமநிலையை பேண முயற்சிக்கவும். உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்க கொடுக்க வேண்டிய நாள். பழைய கடன்கள் தீரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செலவு அதிகரிக்க கூடிய நாள். முடிந்தவரை அதை கட்டுப்படுத்தி சேமிக்கும் முயற்சியில் ஈடுபடவும். சில மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கலாம். இன்று உங்களுடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். வியாபாரம் தொடர்பாக புதிய அனுபவம் கிடைக்கும். உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேற வாய்ப்புகள் உண்டு. நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பூர்விகா சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். குலதெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்திலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களுக்கு பிடித்த செயல்கள் அல்லது பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். சமூக பணிகளில் புதிய மாற்றங்களை செய்ய நினைப்பீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குவாதியை காப்பாற்ற சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்களுடைய தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழிகள் தென்படும்.சகோதரர் வழிகளில் உதவி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செலவுகள் கட்டுப்படுத்துவதில் கவனம் தேவை. பெரிய முதலீடுகள் செய்வதற்கு முன் அன்பு யோசித்து செயல்படவும். புதிய திறனை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சிறந்து விளங்குவார்கள். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்த செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவும் கிடைக்கும். தொழில் செய்யக்கூடியவர்கள் அரசு வழியில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவார்கள்.வண்டி வாகன பயன்பாட்டில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்கவும். இன்று உங்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் யோசனை மூலம் உங்களுக்கு புதிய சிந்தனை பிறக்கும். வியாபாரம் செய்யக்கூடியவர்கள் அதிக போட்டியை சந்திக்க வாய்ப்பு உண்டு.இன்று உங்கள் மனதில் இருக்கக்கூடிய தயக்கங்கள் விலகும். தனிமையில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் வரன் அமைய வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக உங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை தொடர்பாக சமநிலையை பேணுவதில் அதிக கவனம் தேவைப்படும். வேலைப்பளு காரணமாக மனசோர்வு அடைய வாய்ப்பு உண்டு. உங்களுடைய தொழில் ரீதியாக கவனம் தேவை. குறிப்பாக முடிவுகள் எடுப்பதில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியம் தொடர்பாக இருந்த தொந்தரவுகள் குறையும். உங்கள் மீது நம்பிக்கை பணிகளை வேகமாக முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும். கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் ஏற்படும். பேச்சுவார்த்தைகள் நல்ல பலனை தரும்.

































