Oct 13, 2026 - 04:07 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இன்று (13) பிற்பகல் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த புன்னாலைக்கட்டுவான் தெற்கை சேர்ந்த 20 மற்றும் 23 வயதுடையே இரு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அதிவேகமாக பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

































