Oct 13, 2026 - 03:53 PM

இலங்கையின் நுண் வணிகங்களுக்கான டிஜிட்டல் தீர்வுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 12 தீர்வுப்
பங்காளர்களையும் 24 தொழில்நுட்பத் தலைமைப் பங்காளர்களையும் இணைத்துள்ளது
டிஜிட்டல் புத்தாக்கங்கள் மூலம் இலங்கையின் நுண் வணிகத் துறையை வலுவூட்டுவதற்கான தனது
அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகள்
வழங்குநரான SLT-MOBITEL, 12 புதிய தீர்வுப் பங்காளர்களையும், 24 தொழில்நுட்பத் தலைமைப்
பங்காளர்களையும் இணைத்துக் கொண்டு தனது Micro Business Ecosystem ஐ கணிசமாக
வலுப்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள நுண் வணிகங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப
வடிவமைக்கப்பட்ட விரிவான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும்
நிறுவனத்தின் திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது. அத்துடன், வலுவான
பங்காளர் சூழலமைப்பு ஒன்றை உருவாக்கி, நுண் வணிகங்கள் டிஜிட்டல் மாற்றத்தைத் தழுவவும், தமது
செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளைத் திறந்திடவும் வழிவகுக்கும் SLT-
MOBITEL இன் தொடர்ச்சியான முயற்சிகளில் இது மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
வலுவாக்கப்பட்டுள்ள இச்சூழலமைப்பின் மூலமாக, நுண் வணிகக் வாடிக்கையாளர்கள் இணைப்புத்திறன்,
தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் விசேட வணிகச் சேவைகளை ஒரே நம்பகமான தளத்தில் ஒருங்கிணைத்து,
ஒரே கூரையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பல
தொழில்நுட்ப சேவை வழங்குநர்களைத் தனித்தனியாக அணுகும் சிரமத்தைக் குறைப்பதுடன், வணிகங்கள்
தங்களின் குறிப்பிட்ட செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப, குறைந்த செலவிலான, இலகுவில்
விரிவுபடுத்தக்கூடிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் இப்புதிய அணுகுமுறை வழிவகுக்கின்றது.
விரைவான செயற்பாடு மற்றும் துரிதமான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதுடன், நுண் வணிகங்கள் தமது
அன்றாட நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ளவும்
விரிவுபடுத்தப்பட்ட பங்காளர் வலையமைப்பு உதவுகின்றது. உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், வணிகச்
செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரித்தல், பாதுகாப்பை
வலுப்படுத்துதல் மற்றும் வணிக வளர்ச்சியை ஆதரித்தல் போன்றவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட தீர்வுகளின்
பலன்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், நிபுணத்துவ தொழில்நுட்ப
ஆலோசனைகளுக்கான அணுகலானது, தொழில்முனைவோர்கள் தங்களின் வணிகத் தேவைகள், வரவு-
செலவுத் திட்டம் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்குப் பொருத்தமான தீர்வுகளைத் தெரிவு செய்ய
வழிவகுக்கின்றது.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள தீர்வுப் பங்காளர்கள், பல்வேறுபட்ட வணிகத் தொழில்நுட்பங்கள் மற்றும்
டிஜிட்டல் சேவைகளில் இருந்து தங்களின் விசேட நிபுணத்துவத்தைக் கொண்டு வருகின்றனர். Metropolitan
Technologies (Pvt) Ltd, Hayleys Fentons Limited, KBSL Information Technologies மற்றும் Siyol International (Pvt) Ltd ஆகிய முன்னணி நிறுவனங்கள் இவ்விரிவுபடுத்தப்பட்ட சூழலமைப்பில் உள்ள முக்கிய பங்காளர்களுள் அடங்குவதுடன், நுண் வணிகங்களுக்கு விசேடமான மற்றும் அத்துறைக்கு உகந்த தீர்வுகளை
வழங்குவதற்கான SLT-MOBITEL இன் திறனை மேலும் வலுப்படுத்துகின்றன.
இம்முயற்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், Collaborative Crowdsourcing Model கீழ் 24 தொழில்நுட்பத்
தலைமைப் பங்காளர்களை SLT-MOBITEL இணைத்துக் கொண்டுள்ளது. விசேட நிபுணத்துவமும் துறை
சார்ந்த அனுபவமும் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் பல்வகைப்பட்ட வலையமைப்பை
ஒன்றிணைப்பதன் மூலம், இம்மாதிரியானது வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு மிகவும்
திறம்பட பதிலளிக்கும் நிறுவனத்தின் திறனை அதிகரிப்பதுடன், விரைவான மற்றும் சுறுசுறுப்பான சேவை
வழங்கலையும் உறுதிசெய்கின்றது.
இவ்வொப்பந்தக் கையெழுத்திடும் நிகழ்வு அண்மையில் ஹில்டன் ரெசிடென்சீஸில் நடைபெற்றது. இதில்
SLT-MOBITEL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத், முன்னாள் தலைமை செயல்பாட்டு அதிகாரி
இமந்த விஜேகோன் மற்றும் SLT-MOBITEL நிறுவனத்தினதும் புதிதாக இணைக்கப்பட்ட பங்காளர்
அமைப்புகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நிறுவனத்தின் பங்காளர் சூழலமைப்பை
வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்நிகழ்வு அமைந்ததுடன், இலங்கையின் நுண்
வணிகங்களிடையே டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கான அவர்களின் கூட்டு
அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
பரந்த தீர்வுகள், விசேட நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கான அணுகல் மூலம், SLT-
MOBITEL வாடிக்கையாளர்கள் தங்களின் வணிகங்களுடன் இணைந்து வளரக்கூடிய தீர்வுகளைத் தெரிவு
செய்து கொள்ள முடியும். இது அவர்களின் திறனை மேம்படுத்தவும், போட்டித்தன்மையை அதிகரிக்கவும்,
மாறிவரும் சந்தைக் கோரிக்கைகளுக்கு மிகவும் திறம்பட பதிலளிக்கவும் வழிவகுக்கின்றது.
பலப்படுத்தப்பட்டுள்ள இச்சூழலமைப்பின் மூலம், SLT-MOBITEL ஒரு நம்பகமான டிஜிட்டல் மாற்றப்
பங்காளராகத் தனது பங்கினைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதுடன், தொழில்முனைவோர்களை வலுவூட்டும்,
வணிகப் போட்டித்தன்மையை அதிகரிக்கும் மற்றும் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச்
செய்யும் புத்தாக்கமான, இலகுவில் விரிவுபடுத்தக்கூடிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான தகவல்
தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கி வருகின்றது.

































