Oct 13, 2026 - 03:50 PM

உருவாகிவரும் காலநிலை இடர்களுக்குத் தீர்வுகாணும் வகையில், 2026 ஆம் ஆண்டின் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தின் சாத்தியமான தாக்கங்களில் இருந்து இலங்கையின் விவசாயத் துறையைப் பாதுகாத்து
வலுப்படுத்துவதற்காக, கொமர்ஷல் வங்கி தனது அபிவிருத்தி கடன் பிரிவின் ஊடாக முன்னாயத்த
நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது.
இத்துறை எதிர்கொள்ளும் இழப்புகளுக்குப் பின்னரான முகாமைத்துவத்திலிருந்து ஆரம்பகட்ட காலநிலை முன்னாயத்த நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, வங்கியானது நாட்டின் முன்னணி அரச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, 2026 செப்டெம்பர் மாதத்தில் இரு பகுதிகளைக் கொண்ட கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. எல் நினோ (El Niño) மற்றும் விவசாயத்தில் அதன் தாக்கம் குறித்த விழிப்புணர்வுத் திட்டம் கொமர்ஷல் வங்கியின் 12 கிளைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டதுடன், வற்றாப்பளை, முத்தையன்கட்டு, பாலம்பாசி, ஒட்டுசுட்டான், லிந்துலை, நெலுவ, களவான, பன்னல, மாதம்பை, மன்னார், வவுனியா மற்றும் குமுழமுனை உள்ளிட்ட 15 வெவ்வேறு இடங்களில் 1,100 க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது.
இந்த தொடர்ச்சியான நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் ஆரம்பமாகின. வங்கியின் கிளிநொச்சிக் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், காலநிலை இடர் முகாமைத்துவம் குறித்து கவனம் செலுத்துவதற்காக சுமார் 100 பங்காளர்கள் ஒன்றிணைந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, விவசாய உயிரியல் பிரிவின் தலைவர் கலாநிதி (திருமதி) சுவந்தினி தெரன்சன் மற்றும் Inthira Group இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. மகேஸ்வரன் ரஜீதன் ஆகியோரால் நடத்தப்பட்ட முதன்மை அமர்வுகள், காலநிலை மாற்றங்களுக்கு எதிராக விவசாய விளைச்சலைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகள் குறித்து பிரதேச விவசாயிகளுக்கு விழிப்புணர்வையூட்டின.
இரண்டாம் கட்ட நிகழ்வுகள் இராஜரட்டை பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தில் இடம்பெற்றது. பீடாதிபதி
பேராசிரியர் எம். எச். ஜே. பி. குணரத்ன, பேராசிரியர் என். எஸ். அபேசிங்க மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களான திரு. ஈ. ஜே. கொஸ்கொல்லகெதர மற்றும் திரு. எச். ஜி. எஸ். சி. விக்கிரமசிங்சூரிய ஆகியோரால் வழிநடத்தப்பட்ட இந்த அமர்வு, IoT அடிப்படையிலான திறன் வானிலை கண்காணிப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம் காலநிலை மீள்திறனின் எல்லையை விரிவுபடுத்தியது. அடுத்த தலைமுறை விவசாயிகளைச் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட, இலக்கு வைக்கப்பட்ட 100 பங்கேற்பாளர்களுள், பிரதேச விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 50 இளம் விவசாயிகள், விவசாய மற்றும் உயிரியல் முறைமை தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயிலும் 30 மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு விலகியோர், மற்றும் விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த 20 விவசாயப் போதகர்கள் ஆகியோர் அடங்குவர்.
இத் திட்டங்கள் ஒன்றை ஒன்று தொடர்புபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டன: கிளிநொச்சி திட்டம் விழிப்புணர்வு மற்றும் விவசாய இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் வலுவாகக் கவனம் செலுத்திய அதேவேளையில், இராஜரட்டை திட்டம் IoT அடிப்படையிலான வானிலை கண்காணிப்பு ஊடாக நடைமுறைத் தொழில்நுட்ப பரிமாணத்தில் கவனம் செலுத்தியது. விவசாயத்திற்கு ஆதரவளிக்கும் முதன்மையான நிதி நிறுவனம் என்ற வகையில், காலநிலை இடர்கள் விவசாய விளைச்சலை நேரடியாக அச்சுறுத்துகின்றன, உற்பத்திச் செலவுகளை உயர்த்துகின்றன, மற்றும் கடன் பெற்றவர்கள் தங்களது நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றும் திறனைப் பாதிக்கின்றன என்பதைத் தாம் உணர்ந்துள்ளதாகக் கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது. விஞ்ஞான அறிவுக்கும் நிதியியல் வளங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், வங்கி விவசாய நிறுவனங்கள் தங்களது பரந்த முதலீட்டுத் திட்டமிடலில் இடர் முகாமைத்துவத்தை ஒருங்கிணைக்க வழிவகுப்பதுடன், தேவைப்படும் இடங்களில் பிரத்யேக கடன், குத்தகை மற்றும் பசுமை நிதியியல் தீர்வுகளையும் வழங்குகின்றது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக்
கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி
இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

































