Oct 13, 2026 - 03:38 PM

மரீன் டிரைவில் நடமாடும் சிறிய வீதி உணவகமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கொழும்பில்
பெயர்பெற்ற உள்ளூர் உணவக வர்த்தக நாமமாக வளர்ச்சி அடைந்துள்ள ஸ்ட்ரீட் பேர்கர்
(Street Burger), ஆனது இலங்கையின் தொழில்முயற்சியாளர்களின் விடாமுயற்சிக்கு சிறந்த
எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இந்த ஒக்டோபர் மாதம் தனது 10ஆவது ஆண்டு
நிறைவைக் கொண்டாடும் இந்நிறுவனம், ஒரு தசாப்த கால தொழில்முனைவு, வளர்ச்சி
மற்றும் இலங்கையின் தனித்துவமான சுவைகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படும்
தரமான பேர்கர் உணவு வகைகளின் பயணத்தைக் கொண்டாடுகிறது.
.2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Street Burger, கொழும்பின் சாதாரண உணவகத் துறையில்
சர்வதேச துரித உணவு வர்த்தக நாமங்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தனது
பயணத்தை ஆரம்பித்தது. உள்ளூர் சந்தையின் விருப்பங்களுக்கு ஏற்ற சுவைகளுடன், புதிய
மூலப்பொருட்கள் மற்றும் தரத்திற்கு முன்னுரிமை அளித்து, அனைவரும் எளிதில்
பெற்றுக்கொள்ளக்கூடிய அதேவேளை உயர்தரமான பேர்கர் உணவு வகைகளை
அறிமுகப்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.
இந்தத் தொலைநோக்குப் பார்வையின் பின்னணியில் Street Burger நிறுவனத்தின் இணை
ஸ்தாபகற்களான தரீக் ஷிப்லி (Tharique Shibly), மசூன் சமூன் (Masoon Samoon) ஆகியோர்
முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் அண்மையில் ஆரம்பித்துள்ள Adikted என்ற உணவுத்
தொழில் முயற்சியும் இவர்களின் தொழில்முயற்சிப் பயணத்தின் மற்றுமொரு
அங்கமாகும்.வெளிநாடுகளில் உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் பணியாற்றிய
அனுபவத்தையும், இலங்கைச் சந்தையில் நிலவிய வாய்ப்புகளையும் கருத்திற்கொண்டு,
உணவின் மீதான ஆர்வம், தொழில்முனைவு ஆற்றல் மற்றும் தங்களின் தனித்துவமான
திறன்களை ஒன்றிணைத்து ஸ்ட்ரீட் பேர்கரை ஆரம்பித்தனர்.
வழமையான உணவகத்தைத் திறப்பதற்குப் பதிலாக, உணவு வாகனம் ஒன்றின் மூலம்
தமது தொழிலை ஆரம்பித்தனர். இதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப்
பழகவும், தமது உணவுத் தயாரிப்பு முயற்சிக்கு வாடிக்கையாளர்களிடையே கிடைக்கும்
வரவேற்பை அறிந்துகொள்ளவும் அவர்களால் முடிந்தது.
இந்த செயற்பாடானது அவர்களின் தொழில் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக
அமைந்தது. Street Burger குறித்த தகவல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாகப்
பரவின. உணவு வாகனத்தைச் சுற்றி வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத்
தொடங்கினர். இதனால், அதிகரித்து வந்த வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி
செய்வதற்காகத் தமது தொழிலை விரிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதை அவர்கள்
உணர்ந்தனர்.
தொழில் வளர்ச்சியடைந்துவரும் நிலையில், ஸிம்ரான் ஸஃபருல்லா (Zimran Zaffarulla),
ஷஸாத் ஃபவ்ஸ (Shazad Fauz) ஆகியோரும் Street Burger நிறுவனத்துடன்
இணைந்துகொண்டனர். நிறுவனத்தின் வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் இவர்களின்
அனுபவங்களும் புதிய சிந்தனைகளும் முக்கிய பங்களிப்பை வழங்கின.இன்று, Street Burger
கொழும்பில் மாத்திரமன்றி, தனித்தனியாக இயங்கும் எட்டு உணவகங்களைக் கொண்ட
நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு உணவு
வர்த்தக நாமமான Adikted நிறுவனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும், இவ்வாறு விரிவடைந்துள்ள போதிலும், Street Burger தனது ஆரம்பகால
அடையாளத்தைத் தொடர்ந்து பேணிவருகிறது. புதிய உள்ளூர் விளைபொருட்கள், தரமான
மூலப்பொருட்கள், உணவின் சுவையிலும் தரத்திலும் ஒரே சீரான தன்மை ஆகியவற்றுக்கு
முன்னுரிமை அளிப்பதுடன், சாதாரண பேர்கர் உணவுக்கும் இலங்கைக்கே உரித்தான
தனித்துவமான சுவையையும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
Street Burger நிறுவனத்தின் இணை நிறுவனர்களான தரீக் ஷிப்லி மற்றும் மசூன் சமூன்
தெரிவிக்கையில்,“தரமான, அதேவேளை அனைவரும் எளிதில் பெற்றுக்கொள்ளக்கூடிய
உயர்தர உணவு அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில்,
ஒரு உணவு வாகனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட எமது பயணம் இன்று மிகப் பெரிய
வளர்ச்சியை எட்டியுள்ளது.இந்தப் பயணத்தில் எமது ஒவ்வொரு உணவகமும், ஒவ்வொரு
வாடிக்கையாளரும், ஸ்ட்ரீட் பேர்கருடன் இணைந்து பயணித்த ஒவ்வொருவரும் தமது
பங்களிப்பை வழங்கியுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக எம்மீது நம்பிக்கை வைத்து,
எமக்கு ஆதரவளித்து, எம்முடன் இணைந்து வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்ற
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.
பத்து ஆண்டுகளைக் கடந்துள்ள ஸ்ட்ரீட் பேர்கரின் பயணம், இலங்கையின்
தொழில்முனைவு, விடாமுயற்சி, உணவின் மீதான ஆர்வம் மற்றும் ஒரு எளிய
யோசனையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைப் பறைசாற்றும்
நடவடிக்கையாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஒரு உணவு வாகனத்துடன் தொடங்கிய
இந்நிறுவனத்தின் பயணத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஸ்ட்ரீட் பேர்கரின்
வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கிய அடிப்படைக் கொள்கைகள் இன்றும் மாறவில்லை.
சிறந்த உணவை வழங்குவதில் கொண்டுள்ள ஆர்வம், தரமான உணவைத் தயாரிப்பதில்
காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒரு உள்ளூர்
முயற்சியால் சிறப்பானதொரு வர்த்தக நாமமாக வளர முடியும் என்ற நம்பிக்கை
ஆகியவையே அதன் வெற்றிப் பயணத்தின் அடித்தளமாகத் தொடர்கின்றன.

































